2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக் கழகம் வெற்றி

Kogilavani   / 2013 ஒக்டோபர் 17 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

ஹஜ்ஜூப் பெருநாளை சிறப்பிக்கும் வகையில் கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சினேகபூர்வ கால்பந்தாட்ட கண்காட்சிப் போட்டி கல்முனை ஐக்கிய பொதுவிளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இக்கண்காட்சிப் போட்டியில் திருகோணமலை பாத்திமா விளையாட்டுக் கழகமும், கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக் கழகமும் மோதியது.  இதில் கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக் கழகம் 3–1 என்ற கோள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

அம்பாறை மாவட்ட கால்பந்தாட்ட சம்மேளன செயலாளரும், கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக் கழகத்தின் செயலாளருமான எம்;.ஐ.எம்.ஏ.மனாப் தலைமையில் நடைபெற்ற இக்கண்காட்சி கால்;பந்தாட்ட போட்டிக்கு கல்முனை மாநகர பிரதி முதல்வர் சட்டத்தரணி நிசாம்; காரியப்பர் பிரதம அதிதியாகவும் மற்றும் சனிமொன்ட்
விளையாட்டுக் கழக முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

வெற்றிபெற்ற அணிக்கு அதிதிகளினால் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
  Comments - 0

  • rinos Wednesday, 30 October 2013 02:18 AM

    innum innum intha team valara vendum ena allh vidam nan pirathikiren...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--