2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

இலங்கை வங்கியின் விளையாட்டுப் போட்டி

Super User   / 2014 ஏப்ரல் 22 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


இலங்கை வங்கியின் உத்தியோகத்தர்களுக்கிடையில் கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் திருகோணமலை மாவட்டம் முதலாமிடம் பெற்று சம்பியனானது.

திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்றது.

இந்த விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர் போட்டிகள் மற்றும் பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சிகள், கிரிக்கெட், கால்பந்தாட்டம், வலைப்பந்து போன்ற நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

கிழக்கு மாகாணத்தில் இலங்கை வங்கி உத்தியோகத்தர்களுக்கு இடையில் வருடாவருடம் நடத்தப்பட்டு வரும் இவ்விளையாட்டு விழாவில் 2014ஆம் ஆண்டுக்கான சம்பியனாக திருகோணமலை மாவட்டம் தெரிவானது.

இரண்டாமிடத்தை அம்பாறை மாவட்டமும், மூன்றாமிடத்தை மட்டக்களப்பு மாவட்டமும் பெற்றுக் கொண்டது.

இவ்விளையாட்டு விழாவில் இலங்கை வங்கியின் சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர் எச்.எம்.முதியன்ச பிரதம அதிதியாகவும், அதிதிகளாக பிராந்திய பொது முகாமையாளர் (கி.மா.) கே.பி.ஆணந்த நடேசன், திருகோணமலை பிராந்திய முகாமையாளர்களான ஏ.எம். சுபையிர், எம்.ஐ.நௌபல், மற்றும் நிந்தவூர் கிளையின் முகாமையாளர் எம்.ஐ.எம்.ஹனிபா உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த் நிகழ்வில் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லவுள்ள இலங்கை வங்கியின் சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர் எச்.எம்.முதியன்சவுக்கு உத்தியோகத்தர்களினால் பாரட்டி  கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X