2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

மூன்று நூல்கள் வெளியீடு

Super User   / 2012 நவம்பர் 20 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


மூன்று நூல்கள் வெளியீட்டு வைபவமும் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கொழும்பு தமிழ் சங்கத்தில் அண்மையில் நடைபெற்றது.

மருதூர் ஏ.எல் அன்சார் எழுதிய 'உன்னை நினைபதற்கு', எஸ்.மோசேஸ் எழுதிய 'இலங்கை தொலைக்காட்சி அலைவரிசைகள்' மற்றும் அக்கரைப்பற்று சப்னா அமீன் எழுதிய  'நிலாச்சோறு' ஆகிய நூல்களே இதன்போது வெளியிடப்பட்டது.

மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீட் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி, முன்னாள் பிரதியமைச்சர் எஸ்.நிஜாமுத்தீன் மற்றும் புடவைக் கைத்தொழில் பயிற்ச்சி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஊடகவியாளர்கள் மற்றும் எழுத்தாளர்களும் கௌரவிக்கப்பட்டனர். (படங்கள்:அஷ;ரப் ஏ சமத்)  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .