2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்

Freelancer   / 2026 ஏப்ரல் 19 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனின் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் நாளை திங்கள் கிழமை ஆகிய இரு தினங்களிலும் கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தியத் துணை ஜனாதிபதி இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளார். அங்கிருந்து அவர் பலத்த பாதுகாப்புடன் கூடிய வாகனப் பேரணியில் காலி முகத்திடலில் அமைந்துள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு வருகை தரவுள்ளார்.

இதன் காரணமாக, அவர் பயணிக்கும் காலப்பகுதியில் அந்தப் பகுதிகளில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து, அவர் தங்கியிருக்கும் ஹோட்டலில் இருந்து ஜனாதிபதி செயலகத்திற்குச் செல்லவுள்ளதால், அதனைச் சூழவுள்ள வீதிகளிலும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், நாளை திங்கள் கிழமை அவர் பயணிக்கும் வீதிகளை அண்டிய பகுதிகளிலும் விசேட போக்குவரத்துத் திட்டங்கள் அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு மற்றும் வாகன நெரிசலைக் கருத்திற்கொண்டு, இந்த நாள்களில் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .