2021 ஜனவரி 16, சனிக்கிழமை

ஆர்ப்பாட்டமில்லாமல் உதவும் அஜித்..!

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 28 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழ் திரையுலகில் ஆர்ப்பாட்டமில்லாமல் உதவும் நடிகர்கள் ஒருசிலர்தான் உள்ளனர். அந்த வரிசையில் அஜித்துக்கும் இடமுண்டு. அவர் இப்பொழுது உதவ முன்வந்திருப்பது பிரபுதேவா குடும்பத்துக்கு.

கடும் நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறார் நயன்தாரா என்று பல வதந்திகள் வரத்தொடங்கியிருக்கின்றன. பாஸ் என்கிற பாஸ்கரன் தான் நயன்தாரா நடிக்கும் கடைசிப் படமாக இருக்கும் எனவும் வதந்திகள் வருகின்றன. படப்பிடிப்பில் சரியாக ஒத்துழைக்கிறாரில்லை என்று வந்த வதந்திகளை பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இயக்குநர் ஏறகனவே மறுத்திருந்தார். இப்படி பல திசைகளிலிருந்தும் எதிர்ப்பினை சம்பாதித்துவரும் நயன்தாராவுக்கு உறுதுணையாக இப்பொழுது இருப்பவர் பிரபுதேவா.

பிரபுதேவாவும் பாரிய நிதி நெருக்கடியில் இருப்பதாகவும் நயன்தாராவின் சம்பள பணம் பூராவும் பிரபுதேவாதான் அனுபவிக்கிறார் என்றும் கிசுகிசுகள் அடிபடாமலில்லை. ஒருவேளை நயன்தாரா இனிமேல் நடிக்காமல் விட்டால், அவருக்கும் சேர்த்து பிரபுதேவா சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்.

இந்நிலையில்தான் பிரபுதேவாவின் கஷ்ட சூழ்நிலையை அறிந்து தனக்கு ஒரு கதை பண்ணும்படி பிரபுதேவாவிடம் கூறியிருக்கிறார் அஜித். ஏனையவர்களின் ‘தலை’ காப்பதில் ‘தல’ எப்பொழுதும் பின்நிற்பதில்லை என்று திரையுலகில் குறிப்பிடுவார்கள். அந்த வார்த்தையினை மெய்யாக்குவதுபோல் பிரபுதேவாவுக்கு அதிர்ஷ்ட கதவினை திறந்து விட்டிருக்கிறார் அஜித்.

பூரிப்பில் இருக்கும் பிரபுதேவா தகுந்த கதையினை அஜித்துக்காக தேடிக்கொண்டிருக்கிறாராம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .