Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 நவம்பர் 17 , மு.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெரும் எதிர்பார்ப்பின் மத்தியில் உருவாகியிருக்கும் உலகநாயகன் கமலஹாசனின் 'மன்மதன் அம்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமை சிங்கபூரில் நடைபெறவிருக்கிறது.
பொதுவாக கமல் படம் என்றாலே பெரும் பரபரப்பு ரசிகர்களுக்கு தொற்றிக்கொள்ளும். மன்மதன் அம்பு படத்தைப் பொறுத்தமட்டில் எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருக்கிறது. காரணம், கமலுடன் மாதவன், திரிஷா, சங்கீதா, உஷா உதுப், ரமேஷ் அரவிந்த் என நட்சத்திர பட்டாளங்கள் ஒன்றிணைந்திருப்பதுதான்.
மன்மதன் அம்பு திரைப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். 6 பாடல்கள் இப்படத்தில் இடம்பெறுகின்றன. இதில் 2 பாடல்களை கமல்ஹாசன் பாடியிருப்பது சிறப்பானதாகும். இந்த பாடல்களின் வெளியீடு எதிர்வரும் சனிக்கிழமை சிங்கபூரில் நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்வில் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர். அத்தோடு மேலைத்தேய நடன மங்கையரின் விசேட நடனமும் இடம்பெறவுள்ளது. 7000 பார்வையாளர்களின் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கமல்ஹாசன் - திரிஷாவின் சிறப்பு நடனமும் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
மன்மதன் அம்பு திரைப்படத்தின் கதை, திரைக்கதையினை கமலே எழுதியுள்ளார். வசனம் கிரேஸிமோகனுடன் சேர்ந்து கமலும் எழுதியுள்ளார். உதயநிதி ஸ்டான்லினின் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருக்கும் 'மன்மதன் அம்பு' திரைப்படம் இவ்வருட இறுதிக்குள் திரையிட உத்தேசித்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது.
8 hours ago
18 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
18 Sep 2025