2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

நயனுக்கு சென்னையில் டும் டும் டும்...

Menaka Mookandi   / 2011 ஜனவரி 09 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் எதிர்வரும் ஜூலை மாதம் திருமணம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் சென்னையில் மும்முரமாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரபுதேவாவுக்கும் அவரது முதல் மனைவியான ரம்லத்துக்கும் எதிர்வரம் ஜூன் மாதன் பரஸ்பர விவாகரத்து வழங்கப்படவுள்ள நிலையிலேயே விவாகரத்து கிடைத்த அடுத்த வாரமே இந்தத் திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், திருமணத்துக்கான இடத்தை தேர்வு செய்வதில் பிரபு தேவாவுக்கும் நயன்தாராவுக்கும் இடையே ஒரு செல்லச் சண்டையே நடந்ததாம்.

இந்த சென்னையே வேண்டாம். ஹைதராபாத்தில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என பிரபுதேவா சொன்னாராம். ஆனால், ஒரு காலத்தில் தன்னால் சுதந்திரமாக வரமுடியாமல் போன இதே சென்னையில்தான் தனது திருமணம் நடக்க வேண்டும் என ஆசைப்படுகிறாராம் நயன்தாரா.

அவரது ஆசைக்கு மதிப்பளித்து, தனது ஹைதராபாத் மோகத்தை விட்டுக் கொடுத்துள்ளார் பிரபுதேவா. ஹைதராபாதில் தனியாக திருமண வரவேற்பு நடத்த உள்ளதாம் இந்த காதல் ஜோடி.


  Comments - 0

 • thivyaa Monday, 21 March 2011 01:19 AM

  ஜூலை வரதுக்கு இன்னும் ரொம்ப நாள் இருக்கு அதுக்குள்ளே மேட்டர் முடிச்சிடுவாங்க

  Reply : 0       0

  sanjei_4@yahoo.com Tuesday, 25 January 2011 09:32 PM

  ஜுலை மாதத்துக்கு இன்னும் கன காலம் இருக்கு. அதுக்குள்ளே எதுவும் நடக்கலாம்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X