2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

தமிழில் அறிமுகமாகும் பிரான்ஸ் அழகி

George   / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் 'மேல்நாட்டு' மருமகன் திரைப்படத்தில் பிரான்ஸ் நாட்டின் மொடல் அழகியும் நடிகையுமான என்ட்ரியன் நடிக்கிறார். ராஜ்கமல் ஹீரோவாக நடிக்கும் இத்திரைப்படத்தை எம்.எஸ்.எஸ் இயக்குகிறார்.


தமிழ்நாட்டு இளைஞர்கள் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு வெளிநாடுகளுக்கு செல்கின்றார்கள். வெளிநாட்டு மோகத்தில் திளைக்கிறார்கள். இன்னும் சிலர் வெளிநாட்டு பெண்களை திருமணம் செய்துகொண்டு அங்கேயே தங்கிவிடுகின்றனர்.

 
அவர்களை பற்றிய கதை ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம் தமிழ் கலாசாரத்தை விரும்பி, நேசித்து தமிழ் இளைஞனை திருமணம் செய்து கிராமத்தில் வாழ விரும்பும் வெளிநாட்டு பெண்ணின் கதை.

 

இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நல்ல வெளிநாட்டு நடிகையை தேடியபோது தமிழ் திரைப்படத்தில் நடிக்க விரும்பம் கொண்டிருந்த ஆண்ட்ரியனை இணையதளம் வாயிலாக கண்டுபிடித்தோம். கதையை சொன்னதும் ஒப்புக்கொண்டு நடித்தார் என்றார் இயக்குநர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X