2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

’அதிகரித்த விலையில் விற்றால் சிறை தண்டனை விதிக்கப்படும்’

Editorial   / 2017 மே 31 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

“தனி வியாபாரி ஒருவர், அரிசியின் விலையை அதிகரித்து விற்றால், அவருக்கு 1,000 தொடக்கம் 10,000 ரூபாய் வரையான அபராதமோ அல்லது 6 மாதம் வரை சிறை தண்டனையோ விதிக்கப்படும்” என்று, நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் ஹஸித திலகரத்ன தெரிவித்தார்.  

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,  

“2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில், அரிசி இறக்குமதியாளர்களின் விவரங்களும் அரிசியைப் பங்கீடு செய்யும் நடைமுறைகளும் கோரப்பட்டுள்ளன.  

இவ்வருடம் மார்ச் வரை, அரிசியின் விலையை, கட்டுப்பாட்டு விலையிலும் பார்க்க அதிகரித்து விற்ற 2,000 வியாபார நிலையங்கள் மீது நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை வழக்குத் தொடர்ந்துள்ளது.  

அத்துடன், இறக்குமதி செய்யப்படும் அரிசியை, உள்ளூர் அரிசியுடன் கலந்து ஏமாற்றி வியாபாரம் செய்து வரும் வர்த்தகர்களுக்கு எதிராக, நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துவருகிறது.  

இந்த மாதத்தில் மாத்திரம், அரிசி விலையை அதிகரித்து விற்ற 500 கடைகள் முற்றுகையிடப்பட்டுள்ளன. அரிசியின் நிர்ணய விலையை மீறி விற்பவர்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் மூலம் சந்தையில் அரிசியின் நியாயமான விலையை பேண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனி வியாபாரி ஒருவர் அரிசியின் விலையை அதிகரித்து விற்றால் அவருக்கு 1000 தொடக்கம் 10000 ரூபாய் வரை அபராதமோ அல்லது 6 மாதம் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .