2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

அமைப்பாளர் உள்ளிட்ட மாணவர்களுக்கு பிடியாணை

Gavitha   / 2017 மே 20 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் அமைப்பாளர் உள்ளிட்ட ஐவருக்கு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதிபதி லால் ரணசிங்க பண்டார, பிடியாணை பிறப்பித்துள்ளார்.

நான்கு மாணவர்களுக்குள் பிக்கு ஒருவரும் உள்ளடங்குகின்றார்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்க முன்னால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்தார்கள் என்று, சினமன் கிரான் பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்புடைய வழக்கு, நேற்று (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, அமைப்பாளரும் நான்கு மாணவர்களும், நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கவில்லை. இதையடுத்து, ஐவருக்கும் பிடியாணை பிறப்பித்த நீதவான், வழக்கை ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி வரை ஒத்திவைத்து தீர்ப்பளித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .