2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

‘இதுவரை விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை’

Editorial   / 2020 ஜனவரி 08 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியமைத் தொடர்பில் கடந்த அரசாங்கத்துக்கு எதிராக, செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் இலஞ்சம் ,ஊழல் விசாரணைப் பிரிவால் எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட 13  அமைச்சர்கள் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வருகைத் தந்த போதே, இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்தா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் 1500 பில்லியன் ரூபாய் அரசி நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் 2016ஆம் ஆண்டே இலஞ்சம், ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதால் இது தொடர்பில் விரைவாக விசாரணைகளை நடத்துமாறு கோரிக்கை விடுப்பதற்காகவே, தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் 13 பேர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவுக்கு வருகைத் தந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--