2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

கடனை அடைக்க மேலும் கடன் பெறும் மின்சார சபை

Editorial   / 2020 ஜனவரி 19 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கவேண்டிய கடன் தொகையை மீள செலுத்துவதற்காக மேலும் கடன் பெறுவற்கு மின்சார சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச வங்கிகளூடாக இந்தக் கடனைப் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு  84 பில்லியன் ரூபாய் கடன், செலுத்த வேண்டியுள்ளது.

கடன் தொகையை செலுத்தத் தவறினால், எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என பெற்றோலியக் கூட்டுத்தாபனம்  பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவித்தல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .