2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

குளவிக் கொட்டு; 28 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Editorial   / 2018 செப்டெம்பர் 14 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ, எஸ்.சதீஸ் 

மஸ்கெலியா சமனளிய வித்தியாலயத்தைச் சேர்ந்த 28 மாணவர்கள், குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில், மஸ்கெலியா வைத்தியசாலையில், இன்று (14) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலையின் இடைவேளை நேரத்தில், மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த மாணவர்களே, இவ்வாறுக் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இந்தச் சம்பவத்தில், தரம் 7 முதல் 9 வரையன வகுப்பு மாணவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் ஹட்டன் வலயக் கல்விப் பணிமனைக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாடசாலையை தற்காலிகமாக மூடுமாறு, வலயக் கல்விப் பணிப்பாளர் கே.ஸ்ரீதரன் பணிப்புரை விடுத்துள்ளார். 

இதனையடுத்து மாணவர்கள் அனைவரும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும்,  மறுஅறிவித்தல் வரும் வரை,  பாடசாலை மூடப்பட்டுள்ளதாகவும் பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--