2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற குற்றச்சாட்டில் 128 பேர் கைது

Suganthini Ratnam   / 2010 ஜூலை 06 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கோமாரி, ஊறணி, குண்டுமடு, அறுகம்பை, உல்லை பொத்துவில் போன்ற பிரதேசங்களில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 128 பேர் சுற்றிவளைப்பின்போது  இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சுற்றிவளைப்பு இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெற்றது. இச்சுற்றிவளைப்பை இலங்கை மின்சாரசபையின் தலைமையலுவலக அதிகாரிகளும் அம்பாறை பிராந்திய மின்சாரசபை அலுவலக அதிகாரிகளும் பொத்துவில் பொலிஸாரின் உதவியுடன் நடத்தினர்.

இதில் கைது செய்யப்பட்ட 128 பேரையும் பொத்துவில் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு, பொத்துவில் ஆகிய இரு பிரதேசங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் இன்று செவ்வாய்க்கிழமை வரையான இரண்டு நாள்கள் இடம்பெற்ற சுற்றிவளைப்பின்போது சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோது தலா ஒருவருக்கு ஆகக்குறைந்த தொகையாக 15,000  ரூபா தொடக்கம் ஒரு இலட்சம் வரை தண்டமாக அறவிடப்பட்டுள்ளதாக மின்சாரசபையின் அதிகாரி தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .