2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: இலங்கை கடற்படை நிராகரிப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , மு.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை, இலங்கைக் கடற்படை முழுமையாக நிராகரித்துள்ளது. 

இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல் காரணமாகக் காயமடைந்த எட்டு மீனவர்கள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, இராமேஸ்வரம் மீனவ சங்கப் பிரதிநிதிகளை குறிப்பிட்டு, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

இந்தச் செய்தி தொடர்பில் கருத்துரைக்கும் போதே, இலங்கைக் கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் தினேஸ் பண்டார, மேற்படி குற்றச்சாட்டை முழுமையாக நிராகரித்தார். 

எவ்வாறெனினும், சட்டவிரோதமான முறையில், கடல் எல்லைக்குள் நுழையும் எந்தவொரு மீனவரையும் கைதுசெய்து, சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக ​அவர் மேலும் தெரிவித்தார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .