Editorial / 2020 மார்ச் 06 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்குப் பின்னர், நாட்டுக்கு உகந்த புதிய அரசமைப்பொன்றைக் கொண்டுவர எதிர்பார்ப்பதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசமைப்பின் 19ஆவது திருத்தம், நாட்டுக்குள் பல சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது என்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்போது இடம்பெறும் பிரச்சினைகளும், இந்தப் 19ஆவது திருத்தம் காரணமாகவே ஏற்பட்டுள்ளதென்றும், அவர் தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்று (09), ஊடக நிறுவனங்களின் பிரதானிகளைச் சந்தித்துக் கருத்துரைக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்துரைத்துள்ள அவர், நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் பின்னர், உடனடியாக மாகாணசபைத் தேர்தலை எதிர்பார்க்க முடியுமென்றுள்ளார்.
15 minute ago
27 minute ago
34 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
27 minute ago
34 minute ago
4 hours ago