2021 ஜனவரி 23, சனிக்கிழமை

தாயும் மகளும் வெட்டிக்கொலை

George   / 2016 ஜூலை 12 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலாங்கொடை வேவல்வத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருபெவில்லா பிரதேசத்தில் வீடொன்றில் தாய்( வயது 37) மற்றும் மகள் (13 வயது) ஆகியோர் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, வேவல்வத்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சடலங்கள், பாதுகாப்பு கருதி அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனை நாளை நடைபெறவுள்ளன.

குறித்த பெண்ணின் கணவனால் இந்த கொலைகள் செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கணவனை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .