Editorial / 2020 ஜனவரி 13 , பி.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட நால்வரை எதிர்வரும் 17ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வௌ்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனரத்னவுக்கு பிணை வழங்கி கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.
அவர் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சட்டமா அதிபரால் மனுவொன்று கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த மீள் பரிசீலனை மனு எதிர்வரும் 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது
அன்றைய தினம், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் மற்றும் வெள்ளை வேன் விவகாரத்தில் தொடர்புடைய இரண்டு சாரதிகள் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு இன்று (13) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025