2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

புலிகளுக்கு அனுமதி வழங்குவதன் மூலம் இலங்கைக்கு சர்வதேச நாடுகள் துரோகம்

Super User   / 2010 ஜூன் 17 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச நாடுகளுக்குள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சியில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஈடுபட்டு வருகின்றது. 

புலிகள் இயக்கத்துக்கு உத்தியோகபூர்வமாக தடை விதித்துள்ள சில நாடுகள் அவ்வியக்கத்தினரை தமது நாடுகளுக்குள் அனுமதித்துள்ளமையானது அந்நாட்டு அரசாங்கங்கள் இலங்கைக்கு செய்யும் நம்பிக்கை துரோகமாகும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், புலிகளின் இந்த முயற்சியினை முறியடிக்கும் வகையில் சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் தி.மு.ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமிஒன்றை மேற்கொண்டுள்ள ஜப்பானிய அரசின் விசேட தூதுவர் யசூஷி அகாஷியை சந்தித்து உரையாடும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார் என்று பிரதமர் அலுவலகம் விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--