Editorial / 2020 மார்ச் 14 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
தம்புளை கஜுவத்தை பிரதேசத்தில் வைத்து பாகிஸ்தான் பிரஜை ஒருவர் வசமாக காணப்பட்ட பாவனைக்கு பொருத்தமற்ற தோடம்பழங்களை தம்புளை பொலிஸார் நேற்று (14) மீட்டுள்ளனர்.
தம்புளை நகர சபையில் எந்தவித அனுமதிகளையும் பெற்றுக்கொள்ளமால் இவர் தோடம்பழ், அப்பில்,கிழங்கு, பெரிய வெங்காயம்ட உள்ளிட்டவைகளை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலுக்கமையே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் பிரஜைக்கு சொந்தமான வீட்டிலிருந்து, இந்த வியாபாரச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதென சுற்றிவளைப்பின் போது பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
எவ்வாறாயினும் பொலிஸார் குறித்த பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொள்ள சென்ற வேளையிலும் வீட்டுக்கு அருகிலிருந்த லொறியொன்றிலிருந்து பழுதடைந்த தோடம்பழங்களை மீண்டும் தூய்மைப்படுத்தி விற்பனைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதனையடுத்து குறித்த தோடம்பழ பெட்டிகள் அடங்கிள லொரியை பொது சுகாதார பணிப்பாளர்கள் பொறுப்பேற்றிருந்ததுடன், பழுதடைந்த தோடம்பழங்களை கொண்டு குடிபானங்களை இவர்கள் தயாரித்துள்ளதாகவும் கண்டறிந்துள்ளனர்.
அதனையடுத்து குறித்த வீட்டில் சோதனையிட்ட போது பாகிஸ்தானியிலிருந்து காலாவதி திகதி பொறிக்கப்படாத நிலையில் கொண்டுவரப்பட்ட அரிசி வகைகளும் மீட்கப்பட்டுள்ளன.
அதனையடுத்து குறித்த பாகிஸ்தான் பிரஜை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பொதுசுகாதார அதிகாரிகள் திங்களன்று நீதிமன்றத்தில் இவரை ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவித்தனர்.
அத்தோடு குறித்த இடத்தில் பாகிஸ்தானிலிருந்து கொண்டுவரப்பட்ட பல்வேறு பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
2 minute ago
39 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
39 minute ago
2 hours ago
2 hours ago