2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

பாதுகாப்புப் பெட்டகத்தை பவ்வியமாய்த் தூக்கிச்சென்ற திருடன்

Thipaan   / 2016 மார்ச் 28 , மு.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

350 கிலோகிராம் நிறையுடைய பாதுகாப்புப் பெட்டகத்தை, அதுவும் கூரைவழியாக தூக்கிச்சென்றுள்ள கொள்ளைச் சம்பவமொன்று, கலன்பிந்துனுவெவவில் இடம்பெற்றுள்ளது.

அநுராதபுரம் கலன்பிந்துனுவௌ, துட்டுவௌ நகரத்தில் உள்ள நிதி நிறுவனத்தில் இருந்த பாதுகாப்புப் பெட்டகமே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் கூரையானது, அஸ்பெஸ்டா சீட்டினால் மூடப்பட்டுள்ளது. அதனை மிகவும் இலாவகமாகப் பிரித்துக்கொண்டு உள்நுழைந்தே, இந்தக் கைவரிசையை காண்பித்துள்ளனர்.

அந்த நிறுவனத்தின் முகாமையாளர், கடந்த 25ஆம் திகதியன்று தனது கடமைகள் நிறைவடைந்ததன் பின்னர், சகல யன்னல்கள் மற்றும் கதவுகளை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, பூட்டப்பட்ட யன்னல்கள் மற்றும் கதவுகள் அவ்வாறே பூட்டியிருக்க, பாதுகாப்புப் பெட்டகத்தை மட்டும் காணவில்லை.

இதுதொடர்பில் பொலிஸில் செய்துள்ள முறைப்பாட்டில், அப்பெட்டகம் 350 கிலோகிராம் நிறைகொண்டது என்றும். அதில், 89,000 ரூபாய் பணமும், 3 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளும் இருந்தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையிலும் பாதுகாப்புப் பெட்டகம் மீட்கப்படவோ அல்லது சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைதுசெய்யப்படவோ இல்லை என்று தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .