2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

‘மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து சிறந்த முடிவை எடுக்க வேண்டும்’

Editorial   / 2019 நவம்பர் 19 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து, தற்போதைய அரசாங்கம் எதிர்வரும் நாள்களில் சிறந்த முடிவொன்றை எடுக்குமென, நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இறுதியாக நடைபெற்ற தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர், இந்நாட்டின் அ​ரசியல் கலாசாரம் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .