Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஏப்ரல் 21, புதன்கிழமை
Gavitha / 2016 மார்ச் 21 , மு.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் இரு உபமின் நிலையங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் குறித்து கண்டறிவதற்காக ஜேர்மனைச் சேர்ந்த நிபுணர்கள் சிலர், இன்று திங்கட்கிழமை (21), இலங்கை வரவுள்ளனர்.
கொட்டுகொட உபமின் நிலையம் மற்றும் பியகம மின் விநியோக நிலையம் ஆகியவற்றில் அண்மையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவங்கள் குறித்தே, மேற்படி நிபுணர்கள் ஆராயவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குறித்த இரு மின்நிலையங்களுக்கும் தற்போது பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், உப மின் நிலையங்கள் காணப்படும் இடங்கள் மற்றும் அவற்றுக்குத் தேவையான பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் அடங்கிய ஆவணமொன்று பாதுகாப்பு அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது என மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு குறிப்பிட்டது.
நாடு முழுவதிலும் 55 உப மின் நிலையங்கள் காணப்படுகின்றன. அண்மையில் ஏற்பட்ட மின் தடையை அடுத்து, அனல் மின்நிலையங்களை உயிர்ப்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago