2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

யாழ். பல்கலைக்கழத்திற்கு 684 மாணவர்கள்

Super User   / 2010 ஜூலை 01 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். பல்கலைக்கழத்திற்கு 2009 - 2010ஆம் கல்வியாண்டுக்கு இம்முறை 684 மாணவர்கள் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகத்திற்கு கிடைத்துள்ள புதிய அனுமதி பெறும் மாணவர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலின்படி சங்கீதம், நடனம், சித்திரமும் வடிவமைப்பும் ஆகிய கற்கை நெறிகளுக்கான பதிவுகள் எதிர்வரும் 9ஆம் திகதி இடம்பெறவிருக்கிறது.

பௌதீக விஞ்ஞானம், உயிரியல் விஞ்ஞானம், சட்டம், விவசாயம், சித்த மருத்துவம் ஆகிய கற்கை நெறிகளுக்கான பதிவுகள் எதிர்வரும் 12ஆம் திகதியும் மருத்துவக் கற்கை நெறிகளுக்கான பதிவுகள் எதிர்வரும் 13ஆம் திகதியும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--