2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விளக்கமறியல்

Editorial   / 2020 ஜனவரி 15 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாதிவெலயில் உள்ள எம்.பிகளுக்கான உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து அவர் நேற்று (14) கைது செய்யப்பட்டிருந்த ரஞ்சன், நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் இன்று (15) முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும்  29ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, நுகேகொடை நீதவான் நீதிமன்றம் ரஞ்சன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு  பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ரஞ்சன் கைது செய்யப்பட்டார்.

ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பிடியாணை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் இதற்கான ஆலோசனையை நேற்று (14) வழங்கியிருந்தார்.

அரசியலமைப்பின் 111 பிரிவின் கீழ், நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்ட குற்றச்சாட்டில் அவரை கைதுசெய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--