2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றில் முன்னிலை

Editorial   / 2020 ஜனவரி 17 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க  நுகேகொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த 4 ஆம் திகதி அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது அனுமதிப்பத்திரம் காலாவதியான நிலையில் கைத்துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அவர், பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், சர்ச்சைக்குரிய அலைபேசி உரையாடல்கள் தொடர்பில் மீண்டும் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

குறித்த வழக்கில் எதிர்வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சிறைச்சாலை அதிகாரிகளால் அவர் நீதிமன்றில் இன்று (17) முற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--