Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மார்ச் 06 , பி.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் சற்று முன்னர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முந்திய செய்தி
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 12 பேருக்கான வெளிநாட்டுப் பயணத் தடையை ஏற்கெனவே விதித்திருந்த கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றம், அவர்களைக் கைது செய்வதற்கான பிடியாணையைப் பிறப்பிப்பதா இல்லையா என்பது தொடர்பில், இன்று வெள்ளிக்கிழமை (06) பிற்பகல் 2.30 மணிக்கு அறிவிக்கவுள்ளது.
இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணைமுறி மோசடிகள் தொடர்பான வழக்கு, கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில், இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, மேற்கண்ட அறிவிப்பை நீதவான் விடுத்தார்.
பிடியாணை பிறப்பிப்பது தொடர்பில், சட்ட மா அதிபரிடம், 7 கேள்விகள் அடங்கிய ஆவணமொன்று, நீதவானால் கையளிக்கப்பட்டு, இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியுமா என்று கேட்கப்பட்டது. இதற்கு, சட்ட மா அதிபரும் பதலளிக்க முடியுமென்றார். ஆனால், அதற்கு சற்று காலநேரம் தேவையென்றும், நீதவானிடம் கோரினார்.
இந்நிலையிலேயே, இந்த வழக்கு, இன்று பிற்பகல் 2.30 மணி வரையில் ஒத்திவைக்கப்பட்டது.
பெர்பெஷுவர் ட்ரெஷரீஸ் லிமிடட், சந்திரேஷ் ரவீந்திர கருணாநாயக்க, லக்ஷ்மன் அர்ஜுன மஹேந்திரன், அர்ஜுன் ஜோசப் அலோசியஸ், பளிசேன அப்புஹாமிலாகே தொன் கசுன் ஓஸதி, ஜெப்ரி ஜோசப் அலோசியஸ், ஷித்த ரஞ்சன் ஹுலுகல்ல, முத்துராஜா சுரேந்திரன், அஜான் கார்தியே புஞ்சிஹேவா, துய்ய ஹென்னதிகே புத்திக சரத்சந்திர, சங்கரபிள்ளை பத்மநாபன், பதுகொட ஹேவா இந்திக்க சமன் குமார ஆகியோருக்கு எதிராகவே, இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
23 minute ago
33 minute ago
46 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
33 minute ago
46 minute ago
59 minute ago