2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

ஹெலியில் திருமண மேடைக்கு வர முயன்ற மணப்பெண் விபத்தில் பலி

Editorial   / 2026 ஏப்ரல் 19 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருமணத்தன்று மணமகனுக்கு இன்ப அதிர்ச்சி (Surprise) கொடுக்க விரும்பிய மணப்பெண்ணின் ஆசை, பெரும் துயரத்தில் முடிந்தது. ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் மணப்பெண் உட்பட நால்வர் உயிரிழந்த சம்பவம் பிரேசிலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  பிரேசில் நாட்டைச் சேர்ந்த மணப்பெண் ஒருவர், தனது திருமண நாளன்று மற்றவர்களைப் போல காரில் வராமல், ஹெலிகாப்டரில் வந்து திருமண மேடையில் இறங்க வேண்டும் என்பதைத் தனது நீண்ட கால கனவாகக் கொண்டிருந்தார். மணமகனுக்குத் தெரியாமல் மிகவும் ரகசியமாக இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவர் செய்திருந்தார்.

  திருமணத்தன்று திட்டமிட்டபடி மணப்பெண், அவரது சகோதரர் மற்றும் அந்தத் திருமணத்தைப் புகைப்படம் எடுக்க வந்த கர்ப்பிணிப் பெண் ஆகியோருடன் ஹெலிகாப்டர் வானில் பறந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக வானிலை மோசமடைந்ததால், கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் தரைக்கடைந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் மணப்பெண், அவரது சகோதரர், புகைப்படக் கலைஞர் மற்றும் விமானி ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

  மறுபுறம், திருமண மண்டபத்தில் தனது வருங்கால மனைவி எப்போது வருவார் என்ற மிகுந்த உற்சாகத்துடனும், எதிர்பார்ப்புடனும் மணமகன் காத்திருந்தார். தனது வாழ்வின் வசந்தம் வீசப்போகும் அந்த நொடியில், தனது இணை பிரிந்துவிட்டதை அறியாத அந்த மணமகனுக்குச் செய்தி தெரிந்ததும் அவர் நிலைகுலைந்து போனார்.

மிகப்பெரிய கொண்டாட்டமாகத் தொடங்கிய அந்த நாள், சில நிமிடங்களில் ஈடுகட்ட முடியாத துயரமாக மாறியது. வாழ்க்கை எவ்வளவு நிலையற்றது என்பதையும், ஒரு நொடியில் எல்லாம் மாறிவிடும் என்பதையும் இந்தச் சம்பவம் உலகிற்கு உணர்த்தியுள்ளது. அந்த மணப்பெண்ணின் ஆன்மா சாந்தியடையட்டும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .