2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

ரூ. 26 இலட்சம் மோசடி: பெண்ணுக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2016 மார்ச் 28 , பி.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி, 26 இலட்சம் ரூபாயை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் பேரில் கைது செய்யப்பட்டுள்ள திருமதி சஞ்ஜீவனி தர்மதாஸவை, ஏப்ரல் மாதம் திகதிவரையிலும் விளக்கமறியில் வைக்குமாறு, கம்பஹா மேலதிக நீதவான் லலித் கன்னங்கர உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்ட அவரை, நீதவான் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை ஆஜர்படுத்திய போதே, மேற்கண்டவாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் செயலாளர் என்று கூறியே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று அறியமுடிகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .