2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

வடக்கு ஊடகவியலாளர்களுக்கு இன்று அனுமதி மறுப்பு

Yuganthini   / 2017 ஜூன் 12 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்ப்பாணத்துக்கு இன்றுத் திங்கட்கிழமை விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்வுகளில் செய்தி சேகரிப்பதற்கு, வடக்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  
காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் ஆராய்வதற்காக, யாழ்ப்பாணத்துக்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவுள்ளார். 

யாழுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி வடமாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும் யாழ் மாவட்டச் செயலகம் என்பவற்றில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.  

இதன்போதே, குறித்த கலந்துரையாடல்களில் செய்தி சேகரிப்பதற்காக வடக்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என தெரிவிக்கப்படுகின்றது.  

இதேவேளை, காலை வேளை பொலநறுவையில் இடம்பெறவுள்ள நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி, மாலை வேளையே யாழுக்கு விஜயம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .