2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

விடுதலை புலி ஆதரவாளர்கள் தமிழகத்தில் குண்டுத்தாக்குதல்

Super User   / 2010 ஜூன் 12 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலை புலிகளின்  ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் தமிழ் நாட்டின் விலுபுரம் மாவட்டத்தில் உள்ள புகையிரத தண்டவாளம் ஒன்றில் குண்டு வெடிக்க செய்துள்ளனர்.

இச்சம்பவம்  இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இக்குண்டு வெடிப்பு காரணமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்தியாவிற்கான விஜயம் மேற்கொண்டமையை கண்டித்தே இக்குண்டு வெடிப்பு  இடம்பெற்றதாக தெரிவிக்கும் துண்டுப்பிரசுரம் அப்பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இக்குண்டு வெடிப்பு காரணமாக சென்னைக்கான பல புகையிரத சேவைகள் ரத்துச்செய்யப்பட்டுள்ளன.

  Comments - 0

  • xlntgson Saturday, 12 June 2010 09:58 PM

    புதுப்பழக்கம்! ஒருவரும் சாகவில்லை, போக போக தெரியும்! உள்துறை விரைந்து செயல்படாதவிடத்து, சட்டீஸ்கடில் கொன்று குவித்தது போல் அப்பாவிகளை கொன்று குவிப்பார்கள். இதெல்லாம் பழையகுருடி கதவைதிறடி என்பது போலத்தான். தமிழ்நாடும் இதெல்லாம் அனுபவிக்கும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை, பொதுமக்களை வன்முறை பிடித்த தலைமை பதவி வெறி பிடித்த அரசியல்வாதிகளிடம் இருந்து யார் காப்பாற்றுவார்களோ? ஆயுதவியாபாரம் எங்காவது பிரச்சினை ஓய விடாது, பழிவாங்கும் உணர்ச்சியை வறுமையை படிப்பறிவின்மையை பயன்படுத்தி பொறாமைத்தீயை தூண்ட?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--