2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் உயிரிழந்த நபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

George   / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாதம்பே பொலிஸ் பிரிவில் புத்தளம்-கொழும்பு பிரதான வீதியின் 62 மைல்கல் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நபர் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை(28) காலை 5 மணியளவில்  இந்த விபத்து இடம்பெற்றதுடன் விபத்தில் உயிரிழந்த நபர், இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

உயிரிழந்த நபர் 50 வயதுடையவர் எனவும் இவர் நீல நிற டீ-சேர்ட் மற்றும் காற்சட்டை அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிலாபம் நீதவான் நீதிமன்ற நீதவானின் ஊடாக மரண விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

விபத்தை ஏற்படுத்திய வாகனம் தொடர்பில் தகவல் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சிலாபம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .