Editorial / 2020 ஜனவரி 13 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹெரோய்ன் வியாபாரத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, பொரளை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபருக்கே கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தண்டனையை இன்று (13) விதித்துள்ளது.
13.2 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்து வியாபாரத்தில் ஈடுபட்டதாக பிரதிவாதிக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த குற்றச்சாட்டில் பிரதிவாதியை குற்றாவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டிய, மரண தண்டனை தீர்ப்பினை அறிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் 22ஆம் திகதி மாளிகாவத்தை பகுதியில் வைத்து குறித்த நபர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago