Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 09 , மு.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(பாரூக் தாஜுதீன்)
குற்றச்சாட்டுக்களின்றி இரண்டு வருடங்களாக விளக்க மறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இருவர் தொடர்பாக சட்டமா அதிபரின் கருத்தை கோரும்படி புலனாய்வுப் பிரிவினருக்கு கொழும்பு மேல் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வவுனியா கொமர்ஷல் வங்கியில் பரமசோதி என்பவரின் கணக்கில் ரூபா 500,000 வைப்பிலிட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வு பொலிஸார் கடந்த 2008ஆம் ஆண்டு ஜுலை 25இல் பதினொரு சந்தேக நபர்களை கைது செய்து தடுத்து வைத்திருந்தனர்.
அவர்களில் மலிஸன் பிரபாகரன, கந்தையா குஞ்சிபாலன் என்ற இருவரைத் தவிர ஏனையோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். தடுத்து வைக்கப்பட்ட இந்த இருவர் மீது இன்னும் குற்றம் எதுவும் சாட்டாமல் புலனாய்வு பொலிஸார் இவர்களை தடுத்து வைத்துள்ளனர். சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா தடுத்து வைக்கப்பட்டவர்கள் சார்பில் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் ஆஜராகினார்.
இவர்கள் குற்றஞ்சாட்டப்படாமல் தடுத்து வைத்திருக்கப்படுவது வழமையான நடைமுறையில் இல்லாதது என நீதிமன்றம் எடுத்துரைத்தது. இதைத் தொடர்ந்து கொழும்பு மேலதிக நீதவான் றெக்ஸி ராஜா இவர்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் கருத்தை கோரும்படி குற்றப்புலனாய்வு பொலிஸாரிடம் பணித்தார். இது தொடர்பான அறிக்கையை நீதிமன்றில் சமர்பிக்கும் படியும் நீதவான் பணித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
6 minute ago
21 minute ago
28 minute ago