2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மதுபோதையில் வாகனம் செலுத்திய 1130 சாரதிகள் கைது

Kanagaraj   / 2014 ஏப்ரல் 16 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


மதுபோதையில் வாகனங்களை செலுத்திய 1130 சாரதிகள் கடந்த 10ஆம் திகதி முதல் இன்று புதன்கிழமை(16) காலை 6 மணிவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனடிப்படையில், செவ்வாய்க்கிழமை(15) முதல் இன்று புதன்கிழமை(16) காலை 6 மணிவரையில் மாத்திரம் 253பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டோரில், 11பேர் பஸ் சாரதிகள் எனவும், 609 பேர் மோட்டார் வாகன சாரதிகள் எனவும், 403பேர் முச்சக்கரவண்டி சாரதிகள் எனவும், 107பேர் ஏனைய வாகன சாரதிகள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X