2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

இந்தியாவில் 15 இலங்கை அகதிகள் மாயம்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 19 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிலுள்ள போகநல்லூர் அகதி முகாமிலிருந்து 15 இலங்கை அகதிகள் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடையநல்லூர் மாவட்டத்திற்கு அருகிலுள்ள போகநல்லூர் அகதி முகாமில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கை நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது இந்த முகாமிலிருந்து 139 இலங்கை அகதிகள் குடும்பங்களில்  15 பேர் காணாமல்போயுள்ளதாக வருவாய்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். 

இவர்கள் காணாமல்போனமை தொடர்பில் சொக்கம்பட்டி பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார்  இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டுள்ளனர். 

அவுஸ்திரேலியக் குடியுரிமை மற்றும் சிறந்த வாழ்க்கைத்தரத்திற்காக இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு கடல் வழியாக பயணிக்கின்றனர். இந்த நிலையில் போகநல்லூர் அகதி முகாமிலிருந்து காணாமல்போன இந்த 15 அகதிகளும் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

இருப்பினும் போகநல்லூர் அகதி முகாமிலிருந்து காணாமல்போன இவர்கள் வேலை தேடி வெளியில் சென்றிருக்கலாம் எனவும் இவர்கள்  ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்குள் முகாமுக்கு திரும்பலாம் எனவும் போகநல்லூர் அகதி முகாமிலுள்ள ஏனைய அகதிகள் தெரிவித்துள்ளனர். (த ஹிந்து)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .