Editorial / 2018 செப்டெம்பர் 15 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்பார்த்துள்ள பஸ் கட்டண அதிகரிப்பு சம்பந்தமாக இரண்டு வாரங்களுக்குள் அரசாங்கத்திடமிருந்து தீர்வை எதிர்பார்ப்பதாக, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கு சமாந்திரமாக பஸ் கட்டணமும் சீராக்கம் செய்யப்படும் விதமான முறை ஒன்று வகுக்கப்பட வேண்டுமென்றார்.
இதேவேளை, விலைச் சூத்திரத்துக்கு அமைவாக மாதம் ஒருமுறை எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்பட வேண்டியதில்லை என்று அனைத்து மாகாண பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார கூறினார்.
அத்துடன், பஸ் கட்டணத்தை அதிகரிப்பதென்றால் அதனை 4 சதவீதத்தால் மாத்திரமே அதிகரிப்பதாக, போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
49 minute ago
49 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
49 minute ago
1 hours ago
1 hours ago