Janu / 2026 மார்ச் 31 , பி.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகன், மருமகள் மற்றும் பேரப்பிள்ளையுடன் தனது சொந்த வீட்டில் வசித்து வந்த ஒரு முதியவர், தனது மருமகளின் அதீத அன்பினால் கவரப்பட்டிருந்தார். அந்த மருமகள், ஒரு மகள் தனது தந்தையை எப்படி கவனிப்பாரோ, அதைவிட மேலாகவே தனது மாமனாரை கவனித்து வந்துள்ளாரர். அவரது உணவு, உடை என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்த அந்த மருமகள், மாமனார் உறவினர் வீட்டுக்கு சென்றால் கூட, ஒரு நாள் கூட அங்கு தங்க விடாமல் அன்பால் கட்டாயப்படுத்தி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
மனைவி தனது தந்தையை இவ்வளவு அன்பாக கவனிப்பதை கண்டு பெருமிதமடைந்த மகன், குடும்பத்தின் பொருளாதார கஷ்டத்தை போக்குவதற்காக வெளிநாடு சென்றுள்ளார். மகன் சென்ற பின்னர், மருமகளின் அன்பு இன்னும் அதிகரித்தது. "இவர் எனது மருமகள் அல்ல, எனது சொந்த இரத்தத்தில் பிறந்த மகள்" என்று அந்த மாமனார் பெருமையுடன் நினைக்குமளவிற்கு அவர் நடந்துகொண்டுள்ளார்.
திடீரென ஒரு நாள் மருமகள் மாமனாருக்கு ஒரு யோசனையை முன்வைத்துள்ளார். பேரப்பிள்ளையை ஒரு சிறந்த பாடசாலையில் சேர்ப்பதற்கு வீட்டு உறுதிப்பத்திரம் (Deed) தன் பெயரில் இருந்தால் மேலதிகமாக 35 புள்ளிகள் கிடைக்கும் என்றும், எனவே காணி மற்றும் வீட்டின் உறுதியை தன் பெயருக்கு மாற்றி தருமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். மருமகளை கண்மூடித்தனமாக நம்பிய மாமனாரும் எவ்வித எதிர்ப்புமின்றி உடனடியாக சம்மதித்து, சொத்துக்களை அவர் பெயருக்கு மாற்றி கொடுத்துள்ளார்.
சொத்துக்கள் கைக்கு வந்த சில காலத்திலேயே மருமகளின் உண்மை முகம் வெளிப்படத் தொடங்கியுள்ளது. அதுவரை காட்டிய அன்பு மறைந்து, கோபம், அதட்டல் மற்றும் அவமதிப்புகள் தொடங்கியுள்ளன. மாமனாரை பற்றி தவறாக கூறி, வெளிநாட்டிலுள்ள மகனின் மனதையும் அவர் கலைத்துள்ளார்.
தன்னால் அங்கு வசிக்க முடியாது என்பதை உணர்ந்த மாமனார், மனவேதனையுடன் வீட்டை விட்டு வெளியேறி தற்போது உறவினர்களின் வீடுகளில் மாறி மாறி தங்கி வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது. "காணியை தன் பெயருக்கு மாற்றும் வரை மட்டுமே மருமகள் அந்த 64 மாயங்களையும் (தந்திரங்கள்) காட்டியிருக்கிறார்" என்பது இப்போது தான் அந்த முதியவருக்கும் அவரது உறவினர்களுக்கும் புரிந்திருக்கிறது.

1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago