Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஜூலை 08 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ், லக்ன பரனமன்ன)
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அரசாங்க அமைச்சருமான விமல் வீரவன்ஸ சற்று முன்னர் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்டிருக்கும் நிபுணர்கள் குழுவை கலைக்குமாறு வலியுறுத்தியே இவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கும் விமல் வீரவன்ஸ, மத அனுஷ்டான நிகழ்வுகளில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்:-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டிருந்த படையினரை பாதுகாப்பதற்காக தனது உயிரைத் தியாகம் செய்யத் தயாராகவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன், இந்த ஆர்ப்பாட்டத்தில் வந்து பொதுமக்களைக் கலந்துகொள்ளுமாறும் இதன்போது விமல் வீரவன்ஸ வேண்டுகோள் விடுத்தார்.
ஏற்கனவே உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்த தேசிய சுதந்திர முன்னணியின் 3 உறுப்பினர்கள் விமல் வீரவன்ஸ உண்ணாவிரதத்தை ஆரம்பிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் தமது உண்ணாவிரதத்தை கைவிட்டனர். தற்போது விமல் வீரவன்ஸ மாத்திரமே உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகிறார்.
இதேவேளை, ரோம் சாசனத்தில் இலங்கை கையெழுத்திடாததால் இலங்கையை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றதிற்கு கொண்டு செல்ல முடியாது எனவும், எனவே அமைச்சர் விமல் வீரவன்ஸவின் உண்ணாவிரதம் வீணானது எனவும் ஐ.தே.கவின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய கூறியுள்ளார்.
34 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago
Updated Mind Thursday, 08 July 2010 06:04 PM
இது நாடுக்கு நல்லது இல்லை. இருந்த போதிலும் இந்த நாடகம் யாருக்கு தேவை? இது அரசாங்கதின் வேலை. இருந்து பார்ப்போம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago