2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

ஐ.தே.கவின் அழைப்பு குறித்து ஜே.வி.பி ஆராயவுள்ளது

Super User   / 2010 ஓகஸ்ட் 22 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எதிர்க்கட்சிகளின் கூட்டு முன்னணியொன்றை அமைப்பதற்கு ஐ.தே.க. பிரதித் தலைவர் கரு ஜயசூரிய விடுத்த அழைப்பு தொடர்பாக தனது அடுத்த அரசியல் குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

அடுத்த வாரம் ஜே.வி.பி.யின் அரசியல் குழுக்கூட்டம் நடைபெறும் எனவும் ஆனால், உரிய திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் ஜே.வி..பியின் தலைவர் சேமாவன்ஸ அமரசிங்க டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

அரசாங்கத்தை எதிர்கொள்வதற்காக எதிர்க்கட்சிகளின் கூட்டணியை அமைக்க முன்வருமாறு ஜே.வி.பிக்கும் ஏனைய எதிர்க்கட்சிகளுக்கும் கரு ஜயசூரிய அழைப்பு விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X