Super User / 2010 ஓகஸ்ட் 26 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

(சுபுன் டயஸ்)
முன்னேஸ்வரம் காளி கோவிலுக்குள் நேற்று தம்மை செல்லவிடாமல் தடுப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைக்கு தேசிய பிக்குகள் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இம்மிருக பலி தொடர்பாக சிலாபம் பொலிஸில் ஓகஸ்ட் 22 ஆம் திகதி செய்யப்பட்ட முறைப்பாடொன்றை பொலிஸார் நீதிமன்றத்தில் பயன்படுத்தி, அதை தவறாக வியாக்கியானப் படுத்தியதாகவும் தேசிய பிக்குகள் சம்மேளனத்தின் அமைப்பாளர் வண ஹெதிகல்ல விமலசார தேரர் கூறினார்.
'பாரம்பரிய சமயச்சடங்கொன்றை தடுப்பதற்கு பௌத்த பிக்குகள் முயற்சிப்பதாக பொலிஸார் நீதிமன்றதில் கூறியுள்ளனர். யுத்தத்திற்குத் தயாராகுவதுபோல் கோவிலுக்கு முன்னால் பொலிஸார் திரண்டிருந்தனர்' எனவும் அவர் தெரிவித்தார்.
'பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரியவுடனும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவுடனும் நாம் கலந்துரையாடினோம். நடவடிக்கை மேற்கொள்வதற்கு கால அவகாசம் போதாது என பிரதிப் பொலிஸ் மா அதிபர் கூறினார்.
அப்பகுதியில் பக்தர்களுக்கு மிருகங்களை விற்கும் வியாரபாரம் நீண்டகாலமாக நடைபெறுகிறது. அங்குவிட்டுச்செல்லப்படும் மிருகங்களும் இறைச்சியும் நாடெங்கிலுமுள்ள இறைச்சிக் கடைகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
பௌத்த, இந்து சமயங்களுக்கிடையிலான சகவாழ்வு பல வருடங்களாக நீடித்து வருகிறது. இந்து சமயம் இத்தகைய மிருக பலியை ஏற்கக்கூடாது. இந்து கலாசாரத்தில் இத்தகைய கொலைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை' எனவும் வண. விமலசார தேரர் கூறினார்.
எதிர்காலத்தில் இவ்வாறான பலிகள் இடம்பெறாமல் தடுப்பதற்கும் சமய சகவாழ்வை உறுதிப்படுத்தவும் தாம் முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். Pix: Pradeep Pathirana


56 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
57 minute ago