Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஓகஸ்ட் 29 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாய்லாந்து அரசியல் சர்ச்சையில் இலங்கை தொடர்பாகவும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. பதவியிலிருந்து நீக்கப்பட்ட தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் சினவத்ரா இலங்கைக்கு ரகசிய விஜயம் மேற்கொண்டாரா என்பது குறித்து அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ரஷ்ய ஆயுத தரகர் ஒருவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த வருடம் தக்சின் சினவத்ரா ரகசியமாக இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தாரா எனவும் இலங்கை நோக்கிச் சென்றதாகக் கூறப்பட்ட ஆயுத விமானமொன்று கைப்பற்றப்பட்டமைக்கும் அச்சந்திப்புக்கும் தொடர்புள்ளதா எனவும் விக்டர் பௌட் எனும் மேற்படி ஆயுத வர்த்தகரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிகோக் சோபா கேட்டுள்ளார்.
தாய்லாந்து பிரதமர் அபிஷேக் வெஜ்ஜஜீவாவுக்கு நெருக்கமான சிறிசோக் சோபா, கடந்த ஏப்ரல் மாதம் தான் விக்டர் பௌட்டை சந்தித்தாக ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால் தான் பிரதமரின் நெருங்கிய உதவியாளர் என்ற அந்தஸ்திலா அச்சந்திப்பு இடம்பெற்றது என்பதை அவர் கூறவில்லை.
எனினும், விக்டர் பௌட்டின் மனைவி அல்லா நேற்று முன்தினம் செய்தியாளர் மாநாடொன்றில் விடுத்த அறிக்கையில் சிறிசோக் சோபா தனது கணவரிடம் பிரதமரின் நெருங்கிய உதவியாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் டிசெம்பர் 12 ஆம் திகதி தக்சின் சினவத்ரா இலங்கைக்கு இரகசியப் பயணம் மேற்கொண்டதாக இலங்கை எதிர்க்கட்சியினர் கூறியதையடுத்து விக்டர் பௌட்டை தான் சந்தித்ததாக சோபா தெரிவித்துள்ளார்.
59 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
4 hours ago