2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

கடத்தப்பட்ட கப்பல் பணியாளர்களை விடுவிப்பது தொடர்பாக எகிப்திய அதிகாரிகளுடன் பேச்சு

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 01 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(காந்திய சேனநாயக்க)

கடந்த ஓகஸ்ட் மாதம் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட பனமா நாட்டுக் கொடியுடன் சென்ற இலங்கைக் கப்பல் பணியாளர்களை விடுவிப்பது தொடர்பில் எகிப்திய அதிகாரிகளுடன் எகிப்திலுள்ள இலங்கைத் தூதரகம் தற்போது கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

உலோக ஒட்டுனர்களாக பணியாற்றிய இலங்கையர்கள் மேற்படி கப்பலில் இருந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேற்படி கப்பல் பணியாளர்களை விடுவிப்பதற்காக சோமாலிய கடற்கொள்ளையர்களுடனான தொடர்பை ஏற்படுத்தித் தருமாறு கென்யாவிலுள்ள இலங்கைத் தூதரகம் ஏற்கெனவே கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (DM)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--