Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 29 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாப்பரசர் 16 ஆம் ஆசிர்வாதப்பரினால் கர்தினாலாக நியமிக்கப்பட்ட கொழும்பு பேராயர் அதி.வண மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று கொழும்பு பேராயர் இல்லத்தில் வைத்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஜோசப் மைக்கேல் பெரேரா மற்றும் ஜோன் அமரதுங்க ஆகியொரும் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி 24 புதிய கர்தினால்கள் பாப்பரசரினால் நியமிக்கப்படவுள்ளனர். அவர்களில் ஆசியாவைச் சேர்ந்த ஒரேயொரு கர்தினாலாக பேராயர் மல்கம் ரஞ்சித் விளங்குகிறார்.
இலங்கையைச் சேர்ந்த ஒருவர் கர்தினாலாக நியமிக்கப்படுவது இது இரண்டாவது தடவையாகும். இலங்கையைச் சேர்ந்த வண.தோமஸ் குரே ஏற்கெனவே கர்தினாலாக அருட்பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. Pix by :- Pradeep Pathirana
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
7 hours ago