Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 29 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுமையா றிஸ்வி)
தமது தலைவர் உதுல் பிரேமரத்னவை கைது செய்ததன் மூலம் அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தை பயமுறுத்த முடியாது என மேற்படி ஒன்றியத்தின் பதில் தலைவர் ராஜீவ் பண்டார இன்று கூறினார்.
உதுல் பிரேமரத்னவை கைது செய்வதற்கு காரணம் எதுவும் இருக்கவில்லை. இன்று வெள்ளிக்கிழமை அவரை கைது செய்தமைக்கு ஒரு காரணம் உள்ளது. திங்கட் கிழமை நீதிமன்றம் கொண்டு செல்ல முன்னர் இரண்டு நாட்கள் அவரை அடைத்து வைத்திருக்க முடியும் என்பதால் அவரை இன்று பொலிஸார் கைது செய்தனர் என்றார் அவர்.
இது தொடர்பாக சஞ்சீவ் பண்டார மேலும் கூறுகையில், "இதை நாம் எதிர்பார்த்தோம். தமது எதிர்கால நடவடிக்கைகளையும், தற்போதைய எதிர்ப்பு நடவடிக்கைகளையும் தடுக்கவே அரசாங்கம் இப்படி செய்கிறது. பிரேமரத்ன ஐ.தே.க.வின் காரியாலயமான சிறிகொத்தவுக்கு வெளியே வைத்து கைது செய்யப்பட்டார்.
இலவச கல்வித்திட்டத்தை சீரழிக்க முயலும் உயர்கல்வி அமைச்சின் சதிகளை அம்பலப்படுத்தியதால் இவர் பழிவாங்கப்பட்டார் என அவர் கூறினார்.
ஜயவர்த்னபுர பல்கலைகழகத்திலிருந்து கைது செய்யப்பட்ட 17 பிக்கு மாணவர்களுக்கு மேலாக 80 பேர் கைதாகியுள்ளனர். எவ்வாறெனினும் அனைத்து பல்கலைகழக மாணவர் சம்மேளனம் தொடர்ந்து பல்கலைகழக மாணவர்களின் உரிமைக்காக போராடும்" என்றார். Pix by :- Waruna Wanniarachchi
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
01 Jul 2025