2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

மேலும் சூதாட்ட நிலையங்கள்

Super User   / 2010 நவம்பர் 02 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வரி வருமானத்தை அதிகரிப்பதற்காக சாத்தியமான சகல இடங்களிலும் சூதாட்ட நிலையங்களை அமைப்பதற்காக புதிய சட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி இன்று கூறியுள்ளது.

சூதாட்ட (விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலமொன்றை அரசாங்கம் மீள அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் இச்சட்டமூலம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளதாகவும் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்.

இச்சட்டமூலத்தின்படி குறித்த அமைச்சர் தீர்மானிக்கும் இடங்களில் சூதாட்ட நிலையங்களை அமைப்பதற்கான அனுமதியளிக்கும் அதிகாரம் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
 


  Comments - 0

  • Fahim Tuesday, 02 November 2010 10:36 PM

    நாட்டைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கத் திட்டமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .