2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

அல் ஜஸீரா வெளியிட்ட புகைப்படங்களை இலங்கை நிராகரிப்பு

Super User   / 2010 நவம்பர் 11 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(டியன் சில்வா)

இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் பதிவு செய்யப்பட்டவை எனக் கூறப்பட்டு, அல் ஜஸீரா தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட காட்சிகளின் உண்மைத் தன்மை குறித்து இலங்கை அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

பலர் சுட்டுக்கொல்லப்படுவதையும் இறந்து கிடப்பதையும் சித்தரிக்கும் இப்புகைப்படங்கள் தொடர்பாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறுகையில், இப்புகைப்படங்கள் புதியவை அல்ல எனவும் ஏற்கெனவே சனல் 4 அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்ட புகைப்படங்களுடன் மேலும் சில படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்றார்.

இப்புகைப்படங்களை அல் ஜஸீரா தொலைக்காட்சி உறுதிப்படுத்த முடியாதுள்ளதால் அப்புகைப்படங்களின் நம்பகத் தன்மை மீண்டும் கேள்விக்குறியாகிறது எனவும் அவர் கூறினார்.

மேற்படி புகைப்படங்கள் இலங்கை இராணுவத்தின் அங்கத்தவர் ஒருவரால் பிடிக்கப்பட்டவை எனவும் பெயர் குறிப்பிடப்படாத வட்டாரமொன்றின் மூலம் அவற்றை தான் பெற்றுக்கொண்டதாகவும் அல் ஜஸீரா தெரிவித்துள்ளது.


  Comments - 0

 • Pudungi Friday, 12 November 2010 12:18 PM

  ஆமாம் கெஹெலிய அவர்களே இந்தப் படங்கள் புதியவை அல்ல, 2009 இல் எடுக்கப்பட்டவை

  Reply : 0       0

  xlntgson Friday, 12 November 2010 09:31 PM

  விகிலீக்சுக்கு என்ன நடந்தது, அதேதான் இதற்கும்.
  பரபரப்பு ஊடக வியாபாரம் பணத்துக்கும் புகழுக்கும்
  இதை கொலைக்குரிய சாட்சியாக சேர்த்துக்கொள்ளவும் கண்கண்ட சாட்சிகள் வேண்டும்; சந்தேகத்திற்கிடமின்றி ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
  தேசபக்தி காரணங்களுக்கு யாரும் பொய் சொல்வார்கள் யுத்தத்திலும் காதலிலும் எல்லாம் ஞாயம் என்று
  யாரும் நண்பரில்லை, யாரும் பகை இல்லை நலன்களே முக்கியம் என்று!
  விகிலீக்ஸ் பற்றி அமெ. அறிக்கை இதுவரை இரகசியமே classified files எவ்வாறு வெளியானது என்ற வியப்பு தவிர ஒன்றில்லை அவ்வாறான கோப்பு 60yrs!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .