2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

ரிஸானாவின் பெற்றோர் நன்றி தெரிவிப்பு

Super User   / 2010 டிசெம்பர் 07 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண்ணான ரிஸானா நபீக்கிற்கான  மரண தண்டனை அமுல்படுத்தப்படுவதை சவூதி அரேபிய மன்னர் இடைநிறுத்தியதற்கு ரிஸானா நபீக்கின் பெற்றோர் சவூதி அரேபிய மன்னருக்கு நன்றி தெரிவிப்பதாக தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தனர்.

ரிஸானா நபீக்கிற்கான  மரண தண்டனை நீக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்தமைக்கும் நன்றி தெரிவிப்பதாக ரிஸானாவின் பெற்றோர் குறிப்பிட்டனர்.

இலங்கைப் பணிப்பெண்ணான ரிஸானா நபீக்கிற்கு மரண தண்டனை அமுல்படுத்தப்படுவதை சவூதி அரேபிய மன்னர் இடைநிறுத்தி வைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு  நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--