2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

'ஐ.தே.க முஸ்லிம் பிரிவின் பிரதிநிதிகள் செயற்குழுவில் உள்வாங்கப்பட வேண்டும்'

Super User   / 2010 டிசெம்பர் 14 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

ஐக்கிய தேசிய கட்சியின் முஸ்லிம் பிரிவின் பிரதிநிதிகளை கட்சியின் செயற்குழுவில் உள்வாங்கப்பட வேண்டும் என அக்கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினரும் ஐ.தே.க முஸ்லிம் பிரிவின் செயலாளருமான முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.

விரைவில் தயாரிக்கப்படவுள்ள ஐ.தே.க முஸ்லிம் பிரிவிற்கான யாப்பு ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான யாப்புடன் சேர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கட்சியின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் இருவர் வீதம் முஸ்லிம் பிரிவிற்கு உள்வாங்கப்படுவார்கள்.

ஐக்கிய தேசிய கட்சியின் முஸ்லிம் பிரிவின் அடுத்த கூட்டம் ஜனவரி 13ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் கரு ஜயசூரிய தலைமையில் கடந்த வாரம் நடைபெற்ற முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் கலந்துகொண்ட கூட்டமொன்றில் ஐ.தே.க முஸ்லிம் பிரிவு உருவாக்கப்பட்டது.

இதன்போது முஸ்லிம் பிரிவின் செயலாளராக முஜிபுர் ரஹ்மான் தெரிவு செய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--