Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Super User / 2011 பெப்ரவரி 19 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையுடனான சர்வதேச கடல் எல்லையில் நடமாடும் இந்திய மீனவர்களை எச்சரிப்பதற்கு நவீன செல்லிட தொடர்புசாதன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவற்கு இந்திய நிபுணர் குழுவொன்று உத்தேசத்துள்ளது.
வைஸ் அட்மிரல் பி.ஆர். ராவ், இந்தியாவின் பிரதம நீர் அளவையில் அதிகாரி ஆகியோர் தலைமையிலான இக்குழுவினர் சர்வதேச கடல் எல்லையை தாண்டிச் செல்லும் மீனவர்களை எச்சரிப்பதற்காக குறைந்தபட்சம் 3 வழிகளை ஆராய்ந்து வருகின்றனர்.
கடலில் மின் பௌதிக கோடொன்றை வரைவதற்கு நாம் எதிர்பார்க்கிறோம். அதன்பின் மேற்படி கோட்டை மீனவர்கள் கடந்து செல்லும் ஒவ்வொரு தடவையும் அம்மீனவர்களின் செல்லிடத் தொலைபேசிகளுக்கு எச்சரிக்கை சமிக்ஞையை அனுப்ப முடியும். என வைஸ் அட்மிரல் ராவ் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாக இந்தியாவின் 'இந்து' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago
1 hours ago